| சான்றிதழ்கள் பெற அலைக்கழிப்பு தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி Dinamalar
சான்றிதழ்கள் பெற அலைக்கழிப்பு தாலுகா அலுவலகத்தில் மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:16

உத்தமபாளையம்:உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அதிகாரிகள், பொதுமக்களை மரியாதை குறைவாக நடந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



வருவாய், இருப்பிடம், ஜாதி மற்றும் பல்வேறு சான்றிதழ்கள், பட்டா மாறுதல் சான்றிதழ்களும் ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். பொதுமக்கள் அரசு சேவை மையங்களில் சான்றிதழ் வேண்டி பதிவேற்றம் செய்தால், சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ., ஆர்.ஐ., கையெழுத்திட்டு, ஆன்லைனில் அனுப்புகின்றனர்.



ஆனால் சான்றிதழ்கள் டவுன்லோடு செய்ய முடிவதில்லை. காரணம் வி.ஏ.ஓ., ஆர்.ஐ.,சான்றழித்தாலும், தாலுகா அலுவலகத்தில் உள்ள துணை தாசில்தார்கள்,கம்ப்யூட்டரில் சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். அப்போது தான் சான்றிதழை டவுன்லோடு செய்ய முடியும். இங்கு தான் அதிகாரிகள் தங்கள் வேலையை காட்டுகின்றனர்.


வி.ஏ.ஓ.,க்கள், ஆர்.ஐ.,க்கள் ஒப்புதல் செய்து அனுப்பினாலும், சம்பந்தப்பட்ட விண்ணப்பத்தாரர்கள், தாலுகாஅலுவலகம் சென்று, அதிகாரிகளை பார்க்க வேண்டும். அப்போது தான் சான்றிதழ் பெற முடியும். அவர்கள் மனது வைத்தால் தான் இல்லையென்றால் அலைய வேண்டியிருக்கும். குறிப்பாக தாலுகாஅலுவலகம் செல்லும் பொதுமக்களிடம் அதிகாரிகள் மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதாக புகார் எழுந்துள்ளது. எனவே, சப்கலெக்டர் தாமதமின்றி சான்றிதழ்களை வழங்கவும், தாலுகா அலுவலகம் வரும் பொதுமக்களிடம் முறையாக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என எதிர்பார்க்கினர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X