அ.தி.மு.க., பிரமுகர் கார், பெட்ரோல் குண்டு வீசி எரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:27

புதுச்சேரி:புதுச்சேரி அருகே அ.தி.மு.க., பிரமுகரின் கார் மற்றும் ஆட்டோவை பெட்ரோல் குண்டு வீசி எரித்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.


புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடி, அண்ணா நகரைச் சேர்ந்தவர் கணேசன். கோட்டக்குப்பம் அ.தி.மு.க., நகர செயலர். இவரது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பிஒய்-01-சிஎன்-9666 பதிவெண் கொண்ட ரெனால்ட் லாட்ஜி கார் நேற்று அதிகாலை 3:15 மணிக்கு திடீரென தீப்பற்றி எரிந்தது. தீ வாடை அறிந்து கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் கார் முழுவதும் தீ பரவி, வீட்டின் சமையல் அறை மற்றும் ஹாலில் தீ பரவியது.தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடாக மாறியது. மேலும், வீட்டின் சமையல் அறை மற்றும் ஹாலில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.இச்சம்பவத்திற்கு 10 நிமிடத்திற்கு முன்னதாக, கணேசன் உறவினரான சின்ன முதலியார்சாவடி, மேட்டுத்தெருவைச் சேர்ந்த பாலமுருகன் வீட்டின் பின்புறம் நிறுத்தி வைத்திருந்த கேஎல்-09-ஏஎச்-1495 பதிவெண் கொண்ட ஆட்டோவை மர்ம நபர்கள் தீ வைத்து சென்றனர். அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர். இருப்பினும், ஆட்டோவின் பெரும் பகுதி எரிந்து சேதமடைந்தது. சம்பவ இடங்களை வானுார் எம்.எல்.ஏ., சக்கரபாணி, பார்வையிட்டார்.


கோட்டக்குப்பம் போலீசார் சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில், சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நடந்த கிரிக்கெட் விளையாட்டில் ஏற்பட்ட மோதல் பிரச்னையில், கணேசன் உறவினர் பாலமுருகனின் மகன் எதிர் தரப்பை தாக்கியுள்ளார். இதன் காரணமாக எதிர் தரப்பினர் பெட்ரோல் குண்டு வீசி கார் மற்றும் ஆட்டோவை எரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X