இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி | செய்திகள் | Dinamalar
இலவம் பஞ்சு பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:53

புதுச்சேரி:புதுச்சேரியில் பிரதான சாலை ஓரங்களில் இருந்த இலவம் பஞ்சு மரங்களில் இருந்து பஞ்சுகள் காற்றில் பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.


புதுச்சேரி, காமராஜர் சாலையில், தட்டாஞ்சவாடி தொழிற்பேட்டை நுழைவு வாயிலில் தொழில் மற்றும் வணிகத்துறை அலுவலகத்திற்கு மேற்கு மற்றும் வடக்கே இலவம் மரங்கள் உள்ளது. இதேபோல் பழைய பஸ் நிலையம் உழவர் சந்தை மற்றும் செஞ்சி சாலை மீன் மார்க்கெட் அருகில் உள்ள இலவம் மரங்களில் உள்ள காய்ந்த பஞ்சு காய்கள் வெடித்து பஞ்சு காற்றில் பறந்து கொண்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.இந்நிலையில் நேற்று மாலை திடீரென வீசிய சூறைக்காற்றில், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மரங்களில் இருந்து இலவம் பஞ்சு, காமராஜர் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை திக்குமுக்காட வைத்தது. தொழிற்பேட்டை முழுவதும், மார்கழி மாத பனிப்பொழிவுபோல் இலவம் பஞ்சு பறந்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X