| போதையில் ரகளை Dinamalar
போதையில் ரகளை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:54

புதுச்சேரி:குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.


ரெட்டியார்பாளையம் உதவி சப்-இன்ஸ்பெக்டர் நாகமுத்து மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மூலக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு குடிபோதையில், அவ்வழியே சென்றவர்களை மிரட்டி ரகளை செய்த கொண்டிருந்த ஜீவானந்தபுரம், சக்திவேலு,40; என்பவரை கைது செய்தனர்.இதேபோன்று, கனகன் ஏரி பகுதியில் குடிபோதையில் ரகளை செய்து கொண்டிருந்த கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத்துார் கிராமத்தை சேர்ந்த கட்டட தொழிலாளி ஜெயராமன், 31; என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X