| பல் வலி தாங்காமல் தற்கொலை Dinamalar
பல் வலி தாங்காமல் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
03:57

வில்லியனுார்:பல் வலியால் அவதியடைந்த பெண் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.


வில்லியனுார், ஒதியம்பட்டு மெயின்ரோடு கணுவாப்பேட்டையை சேர்ந்தவர் பாலபாஸ்கரன். வீட்டிலேயே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அமுதா,51; இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் மீனாட்சிக்கு திருமணம் நடந்துவிட்டது. இளைய மகள் காயத்ரி பாலிடெக்னிக் படித்து வருகிறார்.தைராய்டு மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அமுதாக, சில ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அமுதாவிற்கு இரு தினங்களாக திடீரென பல்வலி ஏற்பட்டது. சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. , விரக்தியடைந்த அமுதா, நேற்று முன்தினம் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X