ஹெல்மெட் அணியாத போலீசாருக்கு சிக்கல் ஒழுங்கு நடவடிக்கையால் அச்சம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஜூன்
2019
05:04
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2019 04:03

மதுரை:மதுரை நகரில் ஹெல்மெட் அணியாத போலீசார் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால் அச்சத்தில் உள்ளனர்.



தமிழகத்தில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் அதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் போலீசாரில் பலர் ஹெல்மெட் அணிவதில்லை சமீபத்தில் ஹெல்மெட் குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிருப்தியை தெரிவித்தது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் மீண்டும் ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்வது சூடுபிடித்தது.



வழக்குப்பதிவு செய்யும் போலீசார், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். நகரில் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுபடி, ெஹல்மெட் அணியாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் 17 போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.




'நானும் போலீசு, நீயும் போலீசு... என் மேலேயே வழக்கு போடலாமா' எனஹெல்மெட் அணியாத போலீசார் வாக்குவாதம் செய்தால் அதுகுறித்து பெயர், போலீஸ் எண் போன்றவை யுடன் அலைபேசி வீடியோவில் பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு உடனே அனுப்பப்படுகிறது.



போக்குவரத்து துணை கமிஷனர் அருண்பாலகோபாலன் கூறுகையில், ''இந்தாண்டு ஹெல்மெட் அணியாத போலீசார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


ஹெல்மெட் வழக்கு எவ்வளவு



ஹெல்மெட் அணியாததற்காக இந்தாண்டில் மே வரை 60,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 60 லட்சத்து 18 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்தாண்டு 1,33,850 வழக்குகள் பதிவு செய்ததுடன், ஒரு கோடியே 33 லட்சத்து 88 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமீறலுக்காக இந்தாண்டு மே வரை 1,38,265 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Rao - Chennai,இந்தியா
12-ஜூன்-201908:39:05 IST Report Abuse
Krishna Rao இந்த ஆண்டில் வெறும் முப்பது போலீசார் மேல் தான் வழக்கு பதியப்பட்டு உள்ளதா, இதுவும் வெறும் கண் துடைப்பிற்க்காக செய்யப்பட்டதே. இந்த ஒரு ஆண்டில் எத்தனை பொதுமக்கள் மீது ஹெல்மெட் வழக்கு பதியப்பட்டுள்ளது என்ற புள்ளி விவரம் லட்சங்களை தாண்டி உள்ளதே. எத்தனை பொலிஸாரின் டூ வீலர்கள் எந்தெந்த காவல் நிலையங்களில் வெயிலிலும், மழையிலும் வீணாக போய் உள்ளது என்ற கணக்கையும் போலீசார் மக்களுக்கு தெரிய படுத்தினால் மக்களுக்கு உபயோகமாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X