மதுரை:மதுரையில் கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் 31ஆம் ஆண்டு கல்வித் திருவிழா அதன் தலைவர் சொக்கலிங்கம் தலைமையில் நடந்தது.
செயற்குழு உறுப்பினர் முருகேசன் வரவேற்றார். திருவருள் முருகன் பக்த சபை ஒருங்கிணைப்பாளர் சாமுண்டி விவேகானந்தன், வ.உ.சி., இலக்கிய பேரவை நிறுவனர் ஹரிமாதவன், பாதிரியார் லுார்துராஜ் ஆகியோர் 300 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள், பைகள் வழங்கினர். புலவர் கி.வேலாயுதன், பக்தசபை நிர்வாகி பி.மார்கண்டன், தாம்பிராஸ் நிர்வாகி அமுதன் பரிசு வழங்கினர்.