| புதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே கேட்களில் சாலை சேதம் Dinamalar
புதுச்சேரி - விழுப்புரம் ரயில்வே கேட்களில் சாலை சேதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:06

புதுச்சேரி:புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான ரயில்வே கேட்களில் ரயில்பாதை உயரத்தை மாற்றி ரயில்வே நிர்வாகம், சாலையை சரி செய்யாததால் தினசரி விபத்துகள் நடந்து வருகிறது.


புதுச்சேரி - விழுப்புரம் இடையிலான ரயில்வே மின் பாதையில், இரு மாதத்திற்கு முன்பு பராமரிப்பு பணி நடந்தது. இதில், தண்டவாளத்திற்கும், ரயில் மின்பாதைக்கு இடையிலான வெர்ட்டிகல் உயரஅளவை 1 அடி வரை உயர்த்தியதால், தண்டவாளங்கள் ஏற்கனவே இருந்த உயரத்தை விட ஒரு அடி அளவுக்கு கீழ்நோக்கி பதிக்கப்பட்டது.புதுச்சேரி-விழுப்புரம் ரயில் பாதையில் 20க்கும் மேற்பட்ட ரயில்வே கேட்கள் உள்ளது. ரயில்வே கேட் பகுதியில் தார் சாலையுடன் புதிக்கப்பட்ட தண்டவாளம் பெயர்த்து எடுத்து, அதன் உயர அளவு மாற்றப்பட்டது.சாலையின் உயரத்தில் இருந்த தண்டவாளம், சாலையை விட தாழ்வான உயரத்திற்கு சென்றால் ரயில்வே கேட்டின் இரு பக்க சாலை தாழ்வாக அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.தண்டவாளத்தின் உயரத்தை மாற்றி அமைத்த ரயில்வே நிர்வாகம், ரயில்வே கேட்டில் சாலை சரி செய்யும் பணியை மேற்கொள்ளாமல் விட்டு சென்று விட்டது.புதுச்சேரி கடலுார் சாலை, புவன்கரே வீதி, வாணரப்பேட்டை, அரும்பார்த்தபுரம், வில்லியனுார் கூடப்பாக்கம், பெரம்பை சாலை, கண்டமங்கலம் உள்ளிட்ட அனைத்து ரயில்வே கேட்டிலும் சாலை சீரமைக்காததால், குண்டும் குழியுமாக உள்ளது.ரயில்வே கேட்டை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் பல இடங்களில் விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.ரயில்வே கேட் பகுதி, ரயில் நிர்வாகத்தின் கீழ் வருவதால் சாலையை சீரமைக்கும் பணியை தெற்கு ரயில்வே மேற்கொள்ள வேண்டும்.அவற்றை சரி செய்யாததால், ரயில்வே கேட்களில் விபத்துகள் தொடர் கதையாக உள்ளது. எனவே, தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக புதுச்சேரி விழுப்புரம் ரயில்பாதையில் உள்ள ரயில்வே கேட்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலை பகுதியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X