| கோவில் அருகில் மதுக்கடை கலெக்டரிடம் பா.ம.க., மனு Dinamalar
கோவில் அருகில் மதுக்கடை கலெக்டரிடம் பா.ம.க., மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:08

காரைக்கால்:காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டி கலெக்டரிடம், பா.ம.க., மாவட்ட செயலர் தேவமணி மனு அளித்துள்ளார்.


மனு விபரம்:திருநள்ளார் அம்பகரத்துார் மெயின்ரோட்டில் பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் சித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில்களுக்கு அருகில் விதிகளை மீறி கலால் துறை இரு மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.பத்ரகாளியம்மன் கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கோவிலில் இரவு தங்கி நேர்த்தி கடன் செலுத்தி செல்கின்றனர்.இந்நிலையில் கோவிலுக்கு அருகில் மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதால், அங்கு மது அருந்துபவர்கள் போதை தலைக்கேறியதும், கோவில் வளாகத்தில் படுத்து விடுகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், குடிப்பிரியர்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.ஆதலால், கோவில் அருகில் உள்ள இரு மதுபான கடைகளை அகற்றிட மாவட்ட நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X