| புகார் பெட்டி.,.,. Dinamalar
புகார் பெட்டி.,.,.
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:10

குடிநீர் வீணாகிறது


புதுச்சேரி வாழைக்குளம் குபேர் பாட சாலை வீதியில், கடந்த ஒரு வாரமாக தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது.

பவதாரணி, புதுச்சேரி.


தெரு விளக்கு எரியவில்லை


சண்முகாபுரம் பாண்டியன் வீதியில் கடந்த ஒரு வாரமாக தெரு விளக்கு எரியவில்லை. குப்பைகளும் அகற்றாததால், துர்நாற்றம் வீசுகிறது.

தமிழ்செல்வம், புதுச்சேரி.


மூலக்குளம் எம்.ஜி.ஆர். நகர் வடக்கு நீல வீதியில் கடந்த 5 வருடமாக தெரு விளக்கு அமைக்கப்படவில்லை. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சாம்பசிவம், மூலக்குளம்.


சாலை அமைப்பது எப்போது?


குயவர்பாளையம், பிள்ளையார் வீதியில், சாலை அமைக்க பூமி பூஜை செய்தும், பணிகள் துவக்கப்படவில்லை.

பாஸ்கர், குயவர்பாளையம்.


வாய்க்கால் பணி மந்தம்


வில்லியனுார், கோட்டைமேடு சந்திப்பில் வாய்க்கால் அமைக்கும் பணி மந்தமாக நடப்பதால், கடந்த 2 மாதங்களாக பஸ்கள் பைபாஸ் வழியாக செல்வதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பவித்ரா, வில்லியனுார்.சாலையில் திரியும் கால்நடைகளால் அவதிவழுதாவூர் சாலை, கலெக்டர் அலுவலகம் எதிரில் சாலையில் கால்நடைகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படுகிறது. பெருமாள், புதுச்சேரி.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X