பாலிடெக்னிக் கல்லுாரிகளில் 'ஸ்பாட் அட்மிஷன்!'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:12

கோவை:பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளதால், சேர்க்கைக்கான அவகாசத்தை நீட்டித்தும்; முதன்முறையாக, 'ஸ்பாட் அட்மிஷனுக்கு' அனுமதியளித்தும், தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ், 51 அரசு பாலிடெக்னிக் தொழில்நுட்ப கல்லுாரிகள் செயல்படுகின்றன.


இக்கல்லுாரிகளில், நேரடி இரண்டாமாண்டு, முதலாமாண்டு, பகுதிநேர பிரிவுகளின் கீழ், டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்புகளில் சேர்வதற்கான கால அவகாசம், கடந்த மே மாதமே முடிந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.ஒரு சில அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளை தவிர, பல கல்லுாரிகளில், 40 முதல், 60 சதவீதம் வரை மாணவர்கள் சேரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், முதன்முறையாக நடப்பாண்டில் துணை கலந்தாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.புதிதாக விண்ணப்பிக்க வரும் மாணவர்களுக்கு, விண்ணப்பங்களை வழங்கி, 'ஸ்பாட் அட்மிஷன்' (உடனடி சேர்க்கை) வழங்கவும், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


அரசு கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'நேரடி இரண்டாமாண்டு படிப்புக்கு, கலந்தாய்வு கடந்த, 3ம் தேதி முடிந்துள்ள நிலையில், சேர்க்கை செயல்பாடுகளுக்கு வரும் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.முதலாமாண்டு மற்றும் பகுதி நேர படிப்புக்கு, 28ம் தேதி வரை விண்ணப்பிக்கவும், ஜூலை 5ம் தேதி வரை சேர்க்கை செயல்பாடுகளுக்கும், அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.நேரடி இரண்டாமாண்டு படிப்புக்கு, கலந்தாய்வு கடந்த, 3ம் தேதி முடிந்துள்ள நிலையில், சேர்க்கை செயல்பாடுகளுக்கு வரும் 14ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X