அசத்தல்: அரசு நூலகங்களில் போட்டித் தேர்வு புத்தகங்கள்: ரூ.50 லட்சத்திற்கு கலை பண்பாட்டுத்துறை 'பர்சேஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஜூன்
2019
08:34
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2019 04:15

புதுச்சேரி:போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ மாணவியர் பயன்படும் வகையிலான புத்தகங்களை, புதுச்சேரி அரசு நுாலகங்களுக்காக ரூ.50 லட்சம் செலவில், கலை பண்பாட்டுத்துறை வாங்கியுள்ளது.


நாட்டின் பழமையான நுாலங்களில் புதுச்சேரி ரோமன் ரோலண்ட் நுாலகமும் ஒன்று. இரண்டு நுாற்றாண்டை நெருங்கும் இந்த நுாலகம், புதுச்சேரி ரோமன் ரோலண்ட் வீதியில் 1827ம் ஆண்டுமே மாதம் 1ம் தேதி பிரெஞ்சு அரசால் பொது நுாலகமாக துவங்கப்பட்டது.சுதந்திரத்திற்கு பிறகு, 1974ம் ஆண்டு, கவர்னர் மாளிகை அருகே தற்போது இயங்கும் கட்டடத்திற்கு இடம் பெயர்ந்தது. 5,013 புத்தகங்களுடன் தொடங்கப்பட்ட இந்த நுாலகம், தமிழ், பிரெஞ்ச், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் தற்போது 4 லட்சம் புத்தகம், 48 ஆயிரத்து 255 உறுப்பினர்களுடன் இயங்கி வருகிறது. புதுச்சேரியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சுற்றுலா வருபவர்கள் கூட இந்த நுாலகத்திற்கு வர தவறுவதில்லை.இந்நிலையில், கொல்கத்தாவில் இயங்கும் தேசிய நுாலக இயக்ககம், ராஜாராம் மோகன்ராய் பவுண்டேஷன் நிதியுதவி மற்றும் கலை பண்பாட்டுத்துறை நிதி சேர்த்து ரூ. 2.50 கோடி செலவில், புதுப்பிக்கப்பட்டு கடந்த ஜனவரியில் திறக்கப்பட்டது.அதேபோன்று,1974ம் ஆண்டு துவக்கப்பட்ட சிறுவர் பிரிவு, 20 ஆயிரம் நுால்களுடன் இயங்கி வந்தது.தற்போதுகூடுதலாக 2000 புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது.


பொது நுாலகமான ரோமண்ட் ரோலண்ட் நுாலகம் தவிர்த்து, புதுச்சேரியில் மொத்தம் 55 கிளை நுாலகங்கள் இயங்கி வருகிறது. அதே போன்று காரைக்காலில் 18, ஏனத்தில் 2, மாகியில் 3 நுாலகங்கள் உள்ளன.இந்த நுாலங்களுக்கு ஆண்டுதோறும் கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்கி, வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய சூழலில் போட்டி தேர்வுகளை மாணவ மாணவியர் கட்டாயம் எதிர் கொள்ள வேண்டிய சூழலில், அவர்களுக்கு வசதியாக, தற்போதைய சூழலில், மாணவ மாணவியர் 'நீட்' உள்ளிட்ட போட்டி தேர்வு களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.அதற்கேற்ப புத்தகங்கள் வாங்க கலை பண்பாட்டுத்துறை முடிவு செய்தது. அதற்காக, எந்த ஆண்டும் இல்லாத அளவில், ஆதிதிராவிடர் சிறப்பு கூறு நிதி ரூ.21 லட்சம் செலவிலும், பிற நுால்களுக்காக ரூ.29 லட்சம் செலவிலும் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது. குறிப்பாக போட்டி தேர்வுக்கு பயன்படும் வகையிலான புத்தகங்கள் 90 சதவீதம் வாங்கப்பட்டுள்ளது.


ஆதிதிராவிடர் நல சிறப்பு கூறு நிதியில் வாங்கப்பட்ட புத்தகங்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இயங்கும் 13 கிளை நுாலகங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் கணேசன் கூறுகையில்,போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு ரூ.50 லட்சம் செலவில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாய்ப்பை மாணவ மாணவியர் பயன் படுத்திக் கொள்ளலாம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் ஏராளமான புத்தகங்கள் நுாலகங்களில் இடம் பெற்றுள்ளது.எனவே, போட்டித் தேர்வு எழுத உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறலாம் என்றார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X