வேண்டும் அதே 'எனர்ஜி!' கூறுகிறார் மாவட்டத்தின் புதிய உடற்கல்வி ஆய்வாளர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:16

கோவை, :''விளையாட்டில் தோல்வியே வெற்றியின் முதல் படி; அதற்கான வழி விடாமுயற்சியும், கடின பயிற்சியுமே ஆகும்,'' என மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி கூறுகிறார்.கோவை மாவட்டத்தின் புதிய உடற்கல்வி ஆய்வாளராக (பொறுப்பு) பதவி ஏற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி, விளையாட்டுத்துறையில் மாணவர்கள் சாதிக்க, நிறைய திட்டங்களை வைத்திருக்கிறார்.


குடியாத்தம் அரசு பள்ளி மாணவியான இவர், படிக்கும்போதே த்ரோபால், பூப்பந்து, கோ-கோ, டென்னிகாய்ட், கபடி, ஹாக்கி விளையாட்டில் புகுந்து விளையாடியுள்ளார்.சென்னை ஒய்.எம்.சி.ஏ., கல்லுாரியில் பி.பி.எட்., எம்.பி.எட்., படிக்கும் போது, சென்னை பல்கலை ஹாக்கி அணியிலும், 1982ல் மாநில கபடி அணியிலும் விளையாடியுள்ளார்.2001 முதல் கோவை குனியமுத்துார் அரசு பள்ளியில், உடற்கல்வி இயக்குனராக பணி புரிந்த ராஜராஜேஸ்வரி, கோவை மாணவர்களை விளையாட்டுத்துறையில் மேம்படுத்த, நிறைய திட்டங்கள் வைத்திருப்பதாக கூறுகிறார்.35 ஆண்டுகள் விளையாட்டுத்துறை அனுபவம் பற்றி?விளையாட்டு, படிப்பு மூலம் கல்லுாரிக்கு போக விரும்பாமல், பள்ளி குழந்தைகளுக்கு அடிப்படை விளையாட்டு கற்பிக்க வேண்டி, பள்ளியில் பணி வாய்ப்பை பெற்றேன்.நான் கற்பித்த பள்ளிகளில் கேரம், செஸ், கபடி, வாலிபால், தடகளம், கோ-கோ போன்ற விளையாட்டுகளில், ஏராளமான அரசுப்பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.


தேசிய நடுவராக தேர்வு பெற்றீர்கள் போலிருக்கிறதே...?தடகளம், வாலிபால் தேசிய நடுவராக, த்ரோபால் மாநில நடுவராக தேர்வு பெற்ற நான், பாரதியார் பல்கலையில் 2017ல் விளையாட்டில் கவுரவ டாக்டர் பட்டமும், 2018ல் பி.ஜி., டிப்ளமோ யோகா பட்டமும் பெற்றேன்.ஓய்வு பெற சிறிது காலமே உள்ளது. இந்த இடைவெளியில் என்ன சாதிக்க போகிறீர்கள்?குறுமையம், மாவட்ட, மண்டல, மாநில போட்டிகளில், கடந்தாண்டுகளை விட கூடுதல் மாணவர்களை பங்கேற்க ஊக்கப்படுத்தி, வெற்றிகள் பெற ஊக்குவிப்பேன்.


முக்கியமாக, தேர்வு போட்டி நடக்கும் இடம், பிள்ளைகளுக்கு போக்குவரத்துக்கு வசதியாக அமையுமாறு தேர்வு செய்வேன். இதனால் ஏராளமான குழந்தைகள் பங்கேற்பர்.மைதான வசதியே இல்லையே...?தனியார் பள்ளிகள் தவிர, அரசு பள்ளிகளில் இருக்கும் மைதானத்தை சீரமைக்கவும், சிறந்த மாணவ, மாணவியருக்கு உபகரணங்களுக்கான உதவியும் அளிக்க முயற்சி எடுப்பேன்.


விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் தரும் அனுபவ பாடம்?விளையாட்டில் பங்கேற்பதே முக்கியம். வாழ்க்கையில், அனைவரும் விரும்புவது வெற்றி மட்டுமே. ஆனால் தோல்வி என்ற மனகஷ்டத்தை போக்கி, உடல் மனவலிமை தரக்கூடிய வெற்றிக்கனி, விளையாட்டு மட்டுமே. ஆகவே, தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல், அதே எனர்ஜியுடன் தொடர்ந்து போராட வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X