| மருத்துவமனை சாதனை Dinamalar
மருத்துவமனை சாதனை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:17

மதுரை:இடது நுரையீரலில் புற்றுநோய் பாதித்த 34 வயது பெண், தொடர்ந்து இருமலில் ரத்தம், காய்ச்சல் அறிகுறிகளுடன் மதுரை வடமலையான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



அவரை பரிசோதித்த டாக்டர்கள், இடது நுரையீரல் முழுவதும் செயலிழந்து இதய துடிப்பு குறைவாக இருந்தது தெரிந்தது. அவருக்கு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மற்றும் நுரையீரல் புற்றுநோயில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் அழகுகணேஷ் தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, இடது நுரையீரலை முழுமையாக அகற்றினர். சவாலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட குழுவினரை மருத்துவமனை தலைவர் புகழகிரி பாராட்டினார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X