| குளத்தில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு Dinamalar
குளத்தில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:18

வடவள்ளி:மகராஜபுரம் வெள்ளிங்கிரி வீதியை சேர்ந்த முருகேசன் மகன் மனோ பிரபாகர், 22. இவர் கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தார். நேற்று முன் தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து, நாகராஜபுரத்தில் உள்ள நரசாம்பதி குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.ஆழத்தில் சென்று குளித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென மனோஜ் பிரபாகர் நீரில் மூழ்கினார். இதைக் கண்ட நண்பர்கள், அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த டாக்டர், வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். வடவள்ளி போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X