| பருவமழையை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை திறப்பு Dinamalar
பருவமழையை முன்னிட்டு கட்டுப்பாட்டு அறை திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:21

கோவை:தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, கோவை கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், தென் மேற்கு பருவமழை, இரண்டு நாட்களாக பெய்து வருகிறது. நேற்று காலை முதலே, லேசான சாரல், அவ்வப்போது கனமழை என மாவட்டத்தில் பரவலாக வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கடந்த வாரத்தில் இருந்த வெப்பம் பெருமளவு தணிந்து, மாவட்டத்தில் நேற்று குளுகுளு சீதோஷ்ணம் நிலவியது.கோவையில் நேற்று அதிகபட்ச பகல் நேர வெப்பம், 31.2 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இரு நாட்களுக்கு முன் இருந்ததை காட்டிலும், நான்கு டிகிரி செல்சியஸ் வெப்பம் குறைந்துள்ளது.பருவமழையின்போது ஏற்படும் பாதிப்புகள் குறித்து, உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வசதியாக, கலெக்டர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருப்பர். பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக, கட்டுப்பாட்டு அறையில், 1077 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி நிறுவப்பட்டுள்ளது.24 மணி நேர மழை அளவுகோவை மாவட்டத்தில், நேற்று காலை 8:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், பதிவான மழை விபரம்: விமான நிலையம் 1.4 மி.மீ., சின்கோனா 31, சின்ன கல்லாறு 38, வால்பாறை பி.ஏ.பி., 19, வால்பாறை தாலுகா அலுவலகம் 18, சோலையாறு 22, ஆழியாறு 9, சூலுார் 2, பொள்ளாச்சி 20, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் 1, வேளாண் பல்கலை 3.5 மி.மீ.,

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X