| கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அமோகம்  Dinamalar
கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அமோகம் 
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:27

பேரூர்:கேரளாவில் துவங்கியுள்ள தென்மேற்கு பருவ மழை காரணமாக, கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில், கோடை மழை பொய்த்ததால், நீர்வரத்து குறைந்தது. கடந்த, மார்ச், 26ம் தேதி முதல், நீர்வீழ்ச்சிக்கு செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. நீர்வீழ்ச்சி பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தென்மேற்கு பருவமழை, கேரளாவில் துவங்கியது.நேற்று காலை, கேரள வனப்பகுதி மற்றும் கோவை குற்றாலம் பகுதியில் மழை பெய்தது. இதனால், நீரின்றி காணப்பட்ட நீர்வீழ்ச்சியில், நீர்வரத்து அதிகரித்துள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும், சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். இருபாலரும் தனித்தனியாக குளிக்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X