| நீர்த்தேக்கத் தொட்டி இடியும் அவலம் Dinamalar
நீர்த்தேக்கத் தொட்டி இடியும் அவலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:28

டி.கல்லுபட்டி:டி.கல்லுபட்டி அருகே உள்ள என்.கொட்டாணிபட்டியில் இடியும் நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை போக்க வைகை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இங்குள்ள உயர்மட்ட நீர்தேக்கத் தொட்டி சேதமடைந்து இடியும் நிலையில் உள்ளது. நீர்த்தேக்கத் தொட்டியின் கீழே மக்கள் குடிநீர் பிடிக்கும் குழாய் உள்ளது. மக்கள் சேதமடைந்த தொட்டியால் பயந்தவாறே தண்ணீர் பிடிக்கும் நிலை உள்ளது. தவிர தொட்டியின் அருகில் குடியிருப்புகளும் உள்ளது. டி.கல்லுபட்டி யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X