'பறந்தன' பழங்குடியினர் குடிசைகள் : பசுமை வீடு கட்டுமானம் தாமதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:29

பேரூர்:மழையுடன் வீசிய சூறை காற்றுக்கு, பழங்குடியினர் குடிசை வீடுகள் சேதமடைந்ததால், பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.கோவை மாவட்டம், மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது, கல்கொத்தி மலை கிராமம். இக்கிராமத்தில், 27க்கும் மேற்பட்ட பழங்குடியினர், குடும்பமாக வசிக்கின்றனர்.


இவர்களின் சிதிலமடைந்த வீடுகளை இடித்து விட்டு, பசுமை வீடுகள் திட்டத்தில், ரூ. 48.60 லட்சம் நிதியில், 27 வீடுகள் கட்ட அரசு முடிவு செய்தது.பாழடைந்த வீடுகள் இடிக்கப்பட்டதால், பழங்குடியினர் குடிசை வீடுகள் அமைத்து வசித்தனர். நேற்று முன்தினம்,மழையுடன் சூறை காற்று வீசியது. இதில், குடிசை வீடுகள் காற்றில் பறந்ததுடன், மழைநீரும் வீடுகளுக்குள் புகுந்ததால், மக்கள் சத்துணவு கூடத்தில் தஞ்சமடைந்தனர்.பழங்குடியினர் கூறுகையில், 'புதிய வீடுகள் கட்டும் பணி, ஒரு மாதமாக நடக்கவில்லை. காற்றுக்கு குடிசைகள் பறந்ததால், தோட்டங்களிலிருந்து தென்னை மட்டையை எடுத்து வந்து, குடிசைகளை சீரமைக்கிறோம். மழை, வனவிலங்குகளின் அச்சம் உள்ளது.


கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றனர்.தொண்டாமுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபனிடம் இது குறித்து கேட்டதற்கு, ''இரண்டு மாதங்களில், கட்டுமான பணிகள் நிறைவு பெறும்,'' என்றார்.மழைக்காலம் துவங்கும் என, அறிந்தும் கட்டுமான பணியை விரைந்து முடிக்காதது ஏன் என்பது, அதிகாரிகளுக்கே வெளிச்சம். காற்றுக்கு குடிசைகள் பறந்ததால், தோட்டங்களிலிருந்து தென்னை மட்டையை எடுத்து வந்து, குடிசைகளை சீரமைக்கிறோம். மழை, வனவிலங்குகளின் அச்சம் உள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X