'குறையொன்றுமில்லை': கோவை மக்கள் கூறும் நாள் வருகிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

12 ஜூன்
2019
08:33
பதிவு செய்த நாள்
ஜூன் 12,2019 04:30

கோவை:மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை, நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் போலவே, கோவை மாநகராட்சி நிர்வாகமும், பொதுமக்களிடம் குறை கேட்க திட்டமிட்டுள்ளது. குறைகளை தீர்க்க தனி அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். புகார்களை பெற தனி செயலியும் வரவிருக்கிறது.


தெருவிளக்கு, குடிநீர் வசதி, குப்பை அள்ளுதல், மழை நீர் வடிகால் துார்வாருதல், ரோடு போடுதல், புதிதாக கட்டடம் கட்டுவதற்கு வரைபட அனுமதி தருதல், வரி நிர்ணயம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை, மாநகராட்சி நிர்வாகம் அளித்து வருகிறது.சேவை குறைபாடு தொடர்பாக, திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை, 0422-2390 261-63 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.


மாநகராட்சி 'வாட்ஸ் ஆப்' எண், 81900 00200க்கு புகைப்படங்களுடன் அனுப்பலாம்.74404 22422 என்ற மொபைல் போன் எண்ணுக்கு, குறைகளை எஸ்.எம்.எஸ்., வடிவில் அனுப்பலாம். இல்லையெனில், commr.coimbatore@tn.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு, குறைகளை அனுப்பலாம் என, மாநகராட்சி அறிவித்துள்ளது.


பொதுமக்கள் தெரிவிக்கும் தகவல்கள், சம்பந்தப்பட்ட அலுவலர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு, சரி செய்யப்படுகின்றன.இதையும் தாண்டி, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தை போலவே, அதே நாளன்று, மாநகராட்சியிலும் குறை கேட்க திட்டமிடப்பட்டுள்ளது.


வாரந்தோறும் திங்கட்கிழமை காலை, 10:00 முதல், மதியம், 12:00 மணி வரை பொதுமக்களிடம் குறை கேட்க, கமிஷனர் முடிவு செய்துள்ளார்.மொபைல் செயலியும் வருகிறது!மாநகராட்சி கமிஷனர் ஷ்ரவன்குமார் கூறுகையில், ''நாளிதழ்களில் சுட்டிக்காட்டப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, தனி அதிகாரி நியமிக்க உள்ளோம்.


மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் விரைவில் துவக்கப்படும். குறைகளை தெரிவிக்க, பிரத்யேக மொபைல் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம் செலுத்தலாம். மாநகராட்சி சேவை எதுவாக இருந்தாலும், அச்செயலியை உபயோகித்தால், தீர்வு கிடைக்கும். விரைவில் இச்செயலியை அறிமுகப்படுத்த இருக்கிறோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X