| பாலிடெக்னிக் 2ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை Dinamalar
பாலிடெக்னிக் 2ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:30

மதுரை:மதுரை மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் மகளிர் பாலிடெக்னிக்குகளில் தற்போது நேரடி இரண்டாமாண்டு, முதலாமாண்டு, பகுதி நேர பட்டயப்படிப்பிலுள்ள சில பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.



இரண்டாமாண்டு பட்டயப்படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 12 வரை விண்ணப்பங்களை பெற்று சமர்ப்பிக்கலாம். முதலாமாண்டு மற்றும் பகுதி நேர பட்டயப்படிப்பு சேர்க்கைக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போருக்கு தற்போது காலியாகவுள்ள பாடப்பிரிவுகளில் கலந்தாய்வு மூலம் சேர்க்கை வழங்கப்படும். மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி அரசு பாலிடெக்னிக் முதல்வர்களை அணுகலாம்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X