| அபாய சங்கிலி இழுத்த 775 பேர்: ரயில்வே ரூ.3 லட்சம் அபராதம் Dinamalar
அபாய சங்கிலி இழுத்த 775 பேர்: ரயில்வே ரூ.3 லட்சம் அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:33

கோவை:சரியான காரணமின்றி அபாய சங்கிலியை இழுத்து, ரயில்களை நிறுத்துவோர் மீது, நடவடிக்கை பாயும் என, தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.ரயில் பயணத்தின்போது பொருட்களை தவற விடுவது, உணவு வாங்குவது, ஸ்டேஷனை தவற விடுவது, 'பேன்' ஓடவில்லை என சரியான காரணமின்றி, அபாய சங்கிலியை இழுத்து பயணிகள் ரயிலை நிறுத்துகின்றனர்.


இதனால், ரயில் தாமதமாவதுடன், இதர பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர்.ரயில்வே விதிப்படி சரியான காரணமின்றி, அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவோருக்கு, ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது, 1,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.தெற்கு ரயில்வேயில் இவ்வாண்டு மே மாதம் வரை, சரியான காரணமின்றி அபாய சங்கிலியை இழுத்ததாக, 775 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.அவர்களிடம் இருந்து, 3 லட்சத்து, 72 ஆயிரத்து, 450 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அவசர காலங்களில், 182 எனும் ஆர்.பி.எப்., உதவி அழைப்பு எண்ணை, பயணிகள் தொடர்புகொள்ள ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X