| விவசாயிகளை தாக்கிய தேங்காய் வியாபாரி Dinamalar
விவசாயிகளை தாக்கிய தேங்காய் வியாபாரி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:34

திருப்பூர்:விவசாயிகளை தாக்கிய தேங்காய் வியாபாரி மற்றும் அவருடன் வந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.தாராபுரம் அடுத்த கரியகாளியம்மன் புதுார், முண்டுவேம்பட்டி கிராம விவசாயிகள் கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில், கரியகாளியம்மன் புதுார் பகுதியில் அதிகப் படியான தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, 40 நாட்களுக்கு ஒருமுறை தேங்காய் பறிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. தேங்காய் வியாபாரிகள் நேரடியாக தென்னந் தோப்புகளில் வந்து தேங்காய்களை பறித்து செல்கின்றனர். இந்நிலையில், தேங்காய் பறிப்பு தொடர்பாக தேங்காய் வியாபாரிக்கும் விவசாயி பக்தவத்சலம் என்பவருக்கும் பிரச்னை எழுந்தது.


இதில், பக்தவத்சலம் மற்றும் அவரது தாயார் வசந்தாமணி ஆகியோரை தேங்காய் வியாபாரி தாக்கியுள்ளார். காயமடைந்த அவர்கள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பக்தவத்சலம் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.அதனை திரும்ப பெறுவதுடன் தேங்காய் வியாபாரியுடன் வந்த நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டிருந்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X