மதுரை:மதுரை வள்ளியம்மாள் நிறுவனம் சார்பில் உதவும் கலை மற்றும் உளவியல் சிகிச்சை அடிப்படை திறன்கள் சான்றிதழ் படிப்புக்கான வகுப்பு ஜூன் 15 சனி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.ஆகஸ்ட் 3 ல் நிறைவு பெறுகிறது.
சனி தோறும் காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை வகுப்புகள் நடக்கும். கல்வித்தகுதி தேவையில்லை. ஆர்வலர்கள் சேரலாம். உளவியல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட பாட நுால்கள் வழங்கப்படும். அனுபவம் வாய்ந்த உளவியல் விஞ்ஞானிகள் நடைமுறை பயிற்சி, விளக்கம் அளிப்பர். சேர விரும்புவோர், 'இயக்குனர், வள்ளியம்மாள் நிறுவனம், 2/18ஏ, பி.பி.ரோடு 2வது தெரு, பங்கஜம் காலனி, மதுரை - 625 009' மற்றும் அலைபேசி எண் 98942 49630' ல் தொடர்பு கொள்ளலாம் என செயலர் ஆனந்தி தெரிவித்துள்ளார்.