| 'கல்பனா சாவ்லா விருது' பெண்களே வாருங்கள்! Dinamalar
'கல்பனா சாவ்லா விருது' பெண்களே வாருங்கள்!
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:36

திருப்பூர்:தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதுக்கு வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.வீர சாகச செயல்களில் ஈடுபடுவோருக்கான கல்பனா சாவ்லா விருதினை தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்குகிறது. சுதந்திர தினத்தன்று விருதுடன், 5 லட்சம் ரூபாய் மற்றும் பதக்கமும் இதற்கு வழங்கப்படும். இந்தாண்டுக்கான விருது அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.தமிழகத்திலுள்ள துணிச்சலான, வீர சாகச செயல் புரிந்த பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென சிறப்பு தேர்வுக்குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். தகுதியானவர்கள் தங்கள் விரிவான பயோடேட்டா மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், 'அரசு முதன்மை செயலர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை - 600 009' என்ற முகவரிக்கு ஜூன் 30க்குள் அனுப்ப வேண்டும், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X