அரசு நிலத்தை வளைத்து கட்டிய ஆக்கிரமிப்பு: அவிநாசி அருகே பரபரப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:38

அவிநாசி:சேவூர் அருகே, கோதை பிராட்டீஸ்வர் கோவிலை ஒட்டி, திருமண மண்டபம் கட்டி, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை வருவாய்த் துறையினர், தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், சேவூர் அடுத்த நடுவச்சேரியில் சிவன் கோவில் உள்ளது. அரசின் நத்தம் புறம்போக்கு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டு, கோவில் கட்ட அனுமதி வழங்கப்பட்டது.


கடந்த, 10 ஆண்டுக்கு முன், இக்கோவிலை ஒட்டி, 31 சென்ட் பரப்பளவில், 'கே.டி.பி., கலையரங்கம்' என்ற பெயரில், திருமண மண்டபம் கட்டப்பட்டது. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ஒரு கோடி ரூபாய். ஆனால், மண்டபம் கட்டப்பட்ட இடம் கோவிலுக்கு சொந்தமானதா, வருவாய்த்துறைக்கு சொந்தமானதா என்ற விபரத்தை அறிந்துக்கொள்ள யாரும் ஆர்வம் காட்டாத நிலையில், அந்த மண்டபம், தனியாரால் வாடகைக்கு விடப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.இந்நிலையில், திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட அளவு நிலத்துக்கு, பட்டா வழங்கக்கோரி, மண்டபத்தை கட்டியவர்கள், தாசில்தாருக்கு மனு வழங்கினர். பரிசீலித்த, வாணிலட்சுமி ஜெகதாம்பாள், நில அளவைக்கு உத்தரவிட்டார்.நில அளவை செய்ததில், மண்டபம் கட்டப்பட்ட இடம், கோவிலை ஒட்டியுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. இதனால், வருவாய்த்துறையினர் பட்டா வழங்க மறுப்பு தெரிவித்தனர். அந்நிலத்தை, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த வருவாய்த்துறையினர், அங்குள்ள மண்டபத்தை குத்தகைக்கு விடுவதென, முடிவெடுத்தனர்.இந்நிலையில், மண்டபத்தை கட்டியவர்களே, குத்தகை உரிமத்தையும் கேட்டு, விண்ணப்பித்தனர். 'அவர்களுக்கு குத்தகைக்கு வழங்க ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம்' என, அவிநாசி வருவாய்த் துறையினர் சார்பில், சுற்றுப்புற கிராமம் தோறும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.


தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் கூறுகையில், ''நடுவச்சேரியில், கே.டி.பி., கலையரங்கம் வருவாய்த்துறை நிலத்தில் கட்டப்பட்டிருந்ததால், கலையரங்க உரிமையாளர்கள் பட்டா கேட்டு வழங்கிய மனுவை நிராகரித்துள்ளோம். அந்த நிலம் வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது,'' என்றார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X