| போக்குவரத்து ஓய்வூதியர் கூட்டம் Dinamalar
போக்குவரத்து ஓய்வூதியர் கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:38

மதுரை:போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு பணப்பலன்களை உடனே வழங்கக்கோரி ஓய்வூதியர்கள் பேரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



மதுரையில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆறாம் ஆண்டு பேரவை கூட்டம் தலைவர் குருசாமி தலைமையில் நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் முருகேசன் வரவேற்றார். மாநில தலைவர் கிருஷ்ணன் பேசினார்.தீர்மானங்கள் ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு நிர்வாகம் கொடுக்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை 2018 ஏப்ரல் முதல் வழங்கவில்லை. ஓய்வு பெறும் அன்றே பணப் பலன்களை வழங்க வேண்டும்.



ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வுடன் மாதம்தோறும் முதல் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஓய்வூதியர்களுக்கு உள்ளது போல் போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கும் மருத்துவத்திட்டம், குடும்ப பாதுகாப்பு நிதி 50 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.நிர்வாகிகள் செல்வராஜ், தேவராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X