| மழை நீரில் தத்தளித்து செல்லும் குழந்தைகள் Dinamalar
மழை நீரில் தத்தளித்து செல்லும் குழந்தைகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:39

அவிநாசி:அவிநாசி அருகே ஒச்சாம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி முகப்பில், மழைநீர் தேங்குவதால், பள்ளிக்குழந்தைகள் பாதிக்கின்றனர்.சேவூர் - ஒச்சாம்பாளையம் காலனியில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அதிகளவில் படிக்கின்றனர்.


பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மழைநீர் வழிந்தோடி செல்ல கால்வாய் வசதி இல்லாததால், மழைக்காலங்களில், பள்ளி வளாகத்தின் முகப்பில், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.இதனால், பள்ளிக்குள் செல்ல, மழைநீருக்குள் நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. மேலும், பள்ளியின் முகப்பில் உள்ள குழியில் மழைநீர் தேங்கியுள்ளது. பள்ளிக்குழந்தைகள் சற்று நிலைத்தடுமாறினாலும், இக்குழிக்குள் விழும் நிலையுள்ளது. அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்த, தக்க வைக்க அறிவுரை வழங்கியுள்ள நிலையில், இதுபோன்ற பிரச்னைகள், பள்ளியின் வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X