நாளை ஜமாபந்தி துவக்கம்! மக்கள் மனு கொடுக்கலாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:40

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களிலும், நாளை (13ம் தேதி), ஜமாபந்தி துவங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும், வருவாய்த்துறை பணிகளை தணிக்கை செய்யும் வகையில், ஜமாபந்தி எனப்படும், வருவாய் தீர்வாயம் நடத்தப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், மூன்று வருவாய் கோட்டங்கள், ஒன்பது தாலுகாக்கள், 33 பிர்காக்கள், 350 வருவாய் கிராமங்கள் உள்ளன.


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ஒன்பது தாலுகாக்களிலும், ஜமாபந்தி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கலெக்டர் பழனிசாமி, காங்கயம் தாலுகா, ஜமாபந்தி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.பல்லடம் தாலுகாவுக்கு, டி.ஆர்.ஓ., சுகுமார், திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு, உதவி கமிஷனர் (கலால்) சக்திவேல், திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு, திருப்பூர் ஆர்.டி.ஓ., செண்பகவல்லி, அவிநாசிக்கு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்.ஊத்துக்குளிக்கு, மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன்; தாராபுரம் தாலுகாவுக்கு, தாராபுரம் சப் கலெக்டர் பவன்குமார், உடுமலை தாலுகாவுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மகராஜன், உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவுக்கு, உடுமலை ஆர்.டி.ஓ., அசோகன் ஆகியோர், ஜமாபந்தி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.திருப்பூர் வடக்குநடப்பு ஆண்டுக்கான, (பசலி 1428) ஜமாபந்தி, நாளை (13ம் தேதி) துவங்குகிறது. திருப்பூர் வடக்கு தாலுகாவில், நாளை, திருப்பூர் வடக்கு பிர்காவுக்கும், 14ம் தேதி வேலம்பாளையம் பிர்காவுக்கும் ஜமாபந்தி நடக்கிறது.திருப்பூர் தெற்குதிருப்பூர் தெற்கு பிர்காவில், நாளை, திருப்பூர் தெற்கு; 14ல் நல்லுார்; 18ல் தெற்கு அவிநாசிபாளையம் பிர்காக்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது.


காங்கயம் தாலுகாவில், 13ல் காங்கயம் பிர்கா; 14ல் ஊதியூர்; 18ல் நத்தக்காடையூர் பிர்கா; 19 மற்றும், 20ம் தேதிகளில், வெள்ளகோவில் பிர்காவுக்கு ஜமாபந்தி நடக்கிறது.பல்லடத்தில், 13ல் பல்லடம் பிர்கா; 14ல் கரடிவாவி; 18ல் சாமளாபுரம், 19 ் பொங்கலுார் பிர்காக்கள். ஊத்துக்குளி தாலுகாவில், 13 மற்றும் 14ம் தேதிகளில் குன்னத்துார் பிர்கா; 18 மற்றும் 19ம் தேதிகளில், ஊத்துக்குளி பிர்கா. அவிநாசி தாலுகாவில், 13 ல் சேவூர் பிர்கா; 14 ல் அவிநாசி மேற்கு; 18 ல் அவிநாசி கிழக்கு; 19ல் பெருமாநல்லுார் பிர்கா.தாராபுரம் தாலுகாவில், 13ல் தாராபுரம் பிர்கா; 14ல், அலங்கியம்; 18ல் மூலனுார்; 19ல் கன்னிவாடி பிர்காக்கள்.


உடுமலை தாலுகாவில், 13 மற்றும் 14ல் உடுமலை பிர்கா; 18 மற்றும் 19ல் குறிச்சிக்கோட்டை; 20 மற்றும் 21ல் பெரியவாளவாடி பிர்கா; 25ம் தேதி குடிமங்கலம் பிர்கா; 26 மற்றும் 27ல் பெதப்பம்பட்டி பிர்கா.மடத்துக்குளத்தில், 13ல் மடத்துக்குளம் பிர்காவிலும், 14ம் தேதி துங்காவி பிர்காவிலும், ஜமாபந்தி நடக்க உள்ளது.21 வகை பதிவேடுவருவாய்த்துறையினர் பராமரிக்கும், 21 வகை பதிவேடுகளை பராமரித்து, ஒப்புதல் வழங்கப்படும். வேளாண்துறையின், அடங்கல் பதிவுகளும் இறுதி செய்யப்படும்.ஜமாபந்தி நாட்களில், காலை, 10:00 மணிக்கு, பொதுமக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கலாம். இறுதி நாளில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X