| எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில் 6 மாடிகள் வரை கட்டலாம் Dinamalar
எய்ம்ஸ் மருத்துவமனை இடத்தில் 6 மாடிகள் வரை கட்டலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:43

திருப்பரங்குன்றம்:மதுரை தோப்பூர் கோ. புதுப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் 6 மாடிகள் வரை கட்டடங்கள் கட்ட மண்ணில் உறுதித் தன்மை இருப்பதாக மண் பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தோப்பூரில் 224.24 ஏக்கரில் 1,264 கோடி ரூபாயில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இதற்கான அடிக்கல்லை ஜன., 27 பிரதமர் மோடி நாட்டினார். இம்மருத்துவமனைக்கு கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனத்தினர், சுகாதார திட்ட இயக்குநர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பொறுப்பு அதிகாரி ஆகியோர் நேற்று முன் தினம் ஆய்வு நடத்தினர்.




எய்ம்ஸ் மருத்துவமனை அமையுமிடத்தின் மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்ய சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் எச்.ஐ.சி.இ.எஸ்., மற்றும் எச்.எல்.எல்., நிறுவனத்தினத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள் மண் மாதிரி எடுத்து நாக்பூருக்கு அனுப்பினர். அங்கு நவீன தொழில் நுட்பத்தில் மண்பரிசோதனை நடந்தது. முடிவில் இடத்தின் மண்ணின் தன்மை ஸ்திரத்தன்மை உடன் இருப்பதால் 6 மாடிகள் வரை கட்டடங்கள் கட்டலாம் என சான்றளிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X