| கடைக்குள் புகுந்து 31 மொபைல் போன் திருட்டு Dinamalar
கடைக்குள் புகுந்து 31 மொபைல் போன் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:45

திருப்பூர்:திருப்பூர் அருகே, மொபைல் கடையின் பூட்டை உடைத்து, 31 மொபைல் போன்களை மர்ம நபர் திருடி சென்றார்.ஊத்துக்குளி, காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் காந்தி, 43; இவர் செங்கப்பள்ளியில் மொபைல் போன் கடை நடத்தி வருகிறார். கடந்த, 9ம் தேதி இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலையில் வந்து பார்த்த போது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த, 31 மொபைல் போன்கள் திருடு போனது தெரிய வந்தது. கடையில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவை கைப்பற்றி ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X