| வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்க அழைப்பு Dinamalar
வேலை வாய்ப்பு முகாம் பங்கேற்க அழைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:49

ஊட்டி:மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், 14ல் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:ஊட்டி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், 14ல் ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 10ம் வகுப்பு தேறிய, தவறிய, பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் முதுகலை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில், 20க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.


காலை, 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்.மேலும், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தேர்வானவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. உரிய காலத்தில் புதுப்பித்து இருப்பின், அரசு வேலைவாய்ப்பையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த முகாமில் முற்றிலும் இலவசமாக பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 0423--2444004 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X