| இந்து முன்னணி செயற்குழு கூட்டம் Dinamalar
இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:50

ஊட்டி:ஊட்டி காந்தள் மேற்கு நகர இந்து முன்னணி செயற்குழு கூட்டம், கஸ்துாரிபாய் நகரில் நடந்தது.நகர செயலாளர் துரை வரவேற்றார். தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மஞ்சுநாத் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில் வரும், 16ம் தேதி வீரசிவாஜி முடிசூட்டு விழா நாளை முன்னிட்டு, இந்து சாம்ராஜ்ய தின விழாவை நடத்துவது; காந்தள் பகுதியில் ஐந்து வார்டுகளிலும் கிளை கமிட்டி அமைத்து, வார சந்திப்பு கூட்டு வழிபாடு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X