விதிமீறி பள்ளி வாகனம் இயக்கம்: அதிகபட்ச அபராதம் விதிக்க முடிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:53

ஊட்டி:'ஆய்வுக்கு உட்படுத்தாத பள்ளி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றி செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


நீலகிரியில், ஊட்டி, கூடலுார் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ், சமீபத்திய கணக்குப்படி, 341 பள்ளி வாகனங்கள் உள்ளன. கலெக்டர் தலைமையில் வட்டார போக்குவரத்து துறையினர், ஊட்டி கலைக்கல்லுாரி மைதானத்தில் வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்ய சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி, வாகனங்களை வரவழைத்தனர். அதன்படி, 268 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. அதில், தரமில்லாத, 17 வாகனங்களுக்கு 'நோட்டீஸ்' கொடுத்து திருப்பி அனுப்பப்பட்டது. 'தரத்துடன் கொண்டு வந்தால் அனுமதி தரப்படும்,' என, தெரிவிக்கப்பட்டது. அதில், 73 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு வரவில்லை.இந்நிலையில், 'தரமில்லாத ஆய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களை சில பள்ளி நிர்வாகங்கள் பள்ளி நாளில் குழந்தைகளை ஏற்றி செல்வதாகவும், முறைகேடாக இயக்கப்படும் தரமில்லாத வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது,' என, பெற்றோர் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.


பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.ஆர்.டி.ஓ., கதிரவன் கூறுகையில், ''பள்ளி வாகனங்களுக்கான என்னென்ன விதிமுறைகளை தெரிவிக்கப்பட்டுள்ளதோ அதை முறையாக பின்பற்றி பள்ளி வாகனங்களை இயக்க வேண்டும். ஆய்வுக்கு உட்படுத்தப்படாத, வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். ''ஆய்வு பணியில் குறிப்பிட்ட வாகனம் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அதிகபட்சம் அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X