| பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிற்கு நேரடி டவுன் பஸ் இயங்குமா Dinamalar
பெரியார் பஸ் ஸ்டாண்ட்டிற்கு நேரடி டவுன் பஸ் இயங்குமா
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:54

பேரையூர்:பேரையூரிலிருந்து மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு நேரடி அரசு டவுன் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



பேரையூரிலிருந்து பெரியார் பஸ் ஸ்டாண்ட் 48 கி.மீ., துாரத்தில் உள்ளது. தற்போதைய நிலையில் பேரையூரிலிருந்து செல்ல 2 மணி நேரமாகிறது. மூன்று பஸ்கள் மாற வேண்டியுள்ளது. பேரையூரிலிருந்து டி.கல்லுப்பட்டி, பின் திருமங்கலம், அங்கிருந்து பெரியார் பஸ் பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். இதனால் பெண்கள், வயதானவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.



பேரையூரிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கானோர் பல்வேறு காரியங்களுக்காக மதுரை சென்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் பெரியார் பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்ல வேண்டியுள்ளது. பயணிகள் நலன் கருதி நேரடி அரசு டவுன் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம்பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. நேரடி டவுன் பஸ்கள் இயக்குவதன் மூலம் அரசுக்கு கணிசமான வருவாயும் கிடைக்கும்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X