'டெபாசிட்' செலுத்தி தற்காலிக பணி? வெறும் 'புரளி'; ஏமாற வேண்டாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
04:54

ஊட்டி:'அரசு போக்குவரத்து கழகத்தில் 'டெபாசிட்' செலுத்தி தற்காலிகமாக பணி வழங்கப்படுவதாக கூறப்படுவது வெறும் புரளி; பொதுமக்கள் ஏமாற வேண்டாம்,' என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.நீலகிரி அரசு போக்குவரத்து கழகத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் கிளைகளில், 340 அரசு பஸ்கள்; கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.



800க்கும் மேற்பட்ட நடத்துனர், கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான நடத்துனர், டிரைவர்கள் ஓய்வு பெற்றனர். ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது சில வழித்தடத்தில் பஸ்கள் இயக்கமும் நிறுத்தப்படுகிறது.


இந்நிலையில், 'ஊழியர்கள் பற்றாக்குறையை போக்க போக்குவரத்து கழகத்தில் தற்காலிகமாக நடத்துனர், டிரைவர்கள் பணியமர்த்தப்படுவதாகவும், இதற்கு ஒரு லட்சம் ரூபாய் 'டெபாசிட்' செலுத்தி பணிபுரிய போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது,' என, பொதுமக்களிடம் தகவல் பரவியுள்ளது.இதனால், கடந்த இரண்டு நாட்களாக ஏராளமானோர் அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து கிளை அலுவலகத்தில் பணியில் சேர வாய்ப்பு கேட்டு வந்த வண்ணம் உள்ளனர்.போக்குவரத்து கழக மாவட்ட மேலாளர் கணேசன் கூறுகையில், ''அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அப்படி வந்தால் பத்திரிகை வாயிலாக தெரிவிக்கப்படும். இது வெறும் 'புரளி' இதை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாறவேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X