வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி : வனச்சரகங்களில் துவக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:00

உடுமலை;உடுமலை, அமராவதி வனச்சரகங்களில், பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், ஆண்டுக்கு இரு முறை வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. உடுமலை, அமராவதி வனச்சரக பகுதிகளில், பருவ மழைக்கு முந்தைய வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.


இதற்காக, இரு வனச்சரகங்களிலும், 21 பீட்களில், 40 பிரிவுகளில், வனத்துறையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள், தன்னார்வலர்கள் என, 120 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதில், புலி, சிறுத்தை போன்ற மாமிச உண்ணிகள் மற்றும் யானை, காட்டு மாடு உள்ளிட்ட பெரிய அளவிலான தாவர உண்ணிகள் கணக்கெடுக்கப்படுகிறது. நேர்க்கோட்டு பாதை, சுற்று என்கிற முறையில், நேரில் பார்த்தல், கேமரா பொருத்தி மறைமுக முறை, விலங்குகளின் எச்சங்கள், தடயங்கள் சேகரித்தல் அடிப்படையில் கணக்கெடுப்பு நடக்கிறது.மேலும், வனத்தின் சூழல், ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் வகைகளும் ஆய்வு செய்யப்பட்டு, பதிவு செய்யப்படுகிறது. கணக்கெடுப்பு பணியை, மாவட்ட வன அலுவலர் திலீப், உதவி மாவட்ட வன அலுவலர் கணேஷ்ராம், வனச்சரகர்கள் தனபால், முருகேஷன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


வனத்துறையினர் கூறுகையில், 'கோடை கால வன விலங்கு கணக்கெடுப்பு, பருவ மழைக்கு முந்தைய கணக்கெடுப்பு என ஆண்டுக்கு இரு முறை வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் தற்போது துவங்கியுள்ளது. அனைத்தும், 'எக்காலஜிக்கல் மொபைல் ஆப்' மூலம் பதிவு செய்யப்படுகிறது. எட்டு நாள் கணக்கெடுப்பில், முதல் நாள் பயிற்சியும், தொடர்ந்து ஆறு நாட்கள் வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணியும், இறுதி நாளில், பதிவுகள் சேகரிக்கும் பணியும் நடக்கிறது,' என்றனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X