| குறைதீர் முகாமில் 46 பேர் மனு Dinamalar
குறைதீர் முகாமில் 46 பேர் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:01

மதுரை:மதுரை மாநகராட்சி 2வது மண்டலத்தில் கமிஷனர் விசாகன் தலைமையில் குறைதீர் முகாம் நடந்தது.


குடிநீர், பாதாள சாக்கடை, சாலை, தெருவிளக்கு வசதி கோரி 46 பேர் மனு அளித்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கமிஷனர் உத்தரவிட்டார். முன்னதாக சூர்யாநகர் கே.வி.ஆர்., தெருவில் 5.27 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட செம்மண் ரோடு, அழகர்கோவில் மெயின் ரோடு, காலனி மெயின்ரோடு பகுதிகளில் 25 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட தார் ரோடுகளை கமிஷனர் ஆய்வு செய்தார். சூர்யா நகர் மற்றும் அண்ணா மாளிகை சுற்றுச்சூழல் பூங்காக்களில் அமைக்கப்பட்ட குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் கூடத்தை பார்வையிட்டார்.



துணை கமிஷனர் குமரேஸ்வரன், உதவி கமிஷனர் பழனிச்சாமி, நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன், உதவி கமிஷனர் (வருவாய்) ரங்கராஜன், செயற்பொறியாளர் ராஜேந்திரன், பி.ஆர்.ஓ., சித்திரவேல் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X