முடங்கும் நிலையில் ஊராட்சிகள்: கை கொடுக்காத தமிழக அரசு | நீலகிரி செய்திகள் | Dinamalar
முடங்கும் நிலையில் ஊராட்சிகள்: கை கொடுக்காத தமிழக அரசு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:03

மடத்துக்குளம்:அரசின் நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால், ஊராட்சி நிர்வாகங்கள் முடங்கும் நிலையை நோக்கிச்சென்று கொண்டுள்ளன.


மடத்துக்குளத்தில் ஒன்றியத்தில் காரத்தொழுவு, துங்காவி, மெட்ராத்தி, வேடபட்டி, சோழமாதேவி, பாப்பான்குளம், கொழுமம், மைவாடி, கடத்துார், ஜோத்தம்பட்டி, தாந்தோனி ஆகிய ஊராட்சிகள் உள்ளன.சீரான குடிநீர் வினியோகம் செய்தல், குழாயில் உடைப்பு ஏற்பட்டால் சரி செய்தல், தெருவிளக்கு பராமரித்தல், துப்புரவுப்பணி, குப்பை மறுசுழற்சி செய்தல், சாக்கடை சுத்தம் செய்தல், ஆகியவற்றில் சீராக ஈடுபட்டு, கிராம மக்களுக்கு சேவை வழங்குவது,


ஊராட்சி நிர்வாகத்தின் அடிப்படை நோக்கம்.இதோடு, நுாறுநாள் வேலை உறுதித்திட்ட பணியாளர்களை தேர்வு செய்து வேலை வழங்குவது, பயனாளிகளை தேர்வு செய்து, அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்துவது, வரி வசூல் உள்ளிட்ட பல பணிகளும் உள்ளன.இதற்காக ஊராட்சி செயலர், துப்புரவு மற்றும் குடிநீர் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கட்டமைப்பு இயங்க நிதிஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், பல மாதமாக போதிய நிதி ஒதுக்கீடு இல்லை.இதனால், ஊராட்சிகள் முடங்கும் நிலையில் உள்ளன. மத்திய அரசிடமிருந்து மாநில அரசு, நிதி ஒதுக்கீடு பெற்று, ஊராட்சிகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்கும். இதை பயன்படுத்தி, பராமரிப்பு, துப்புரவுப்பணிகள் நடக்கும். தற்போது, நிதிஒதுக்கீடு இல்லாத காரணத்தால், அனைத்து பணிகளும் தேங்கி உள்ளன.ஊராட்சி செயலர்கள் கூறுகையில், 'பலவித நிதி நெருக்கடியில் நிர்வாகம் உள்ளது.


ஒரு தெரு விளக்கு சரி செய்து பொருத்த, 50 ரூபாய் வழங்க வேண்டும், தொகை இல்லாத காரணத்தால் பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. பல மாதமாக போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. மிகவும் திணறி வருகிறோம்' என்றனர்.பொதுமக்கள் கூறுகையில், 'துப்புரவுப்பணி தேங்கினால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் தாக்குதலால் மக்கள் பாதிக்கப்படுவர். தெருவிளக்கு பராமரிப்பு இல்லாமல் தொடர்ந்து இருள் சூழ்ந்தால், வழிப்பறி, திருட்டுக்கு வழி வகுக்கும். இதனால், நாட்டின் முதுகெலும்பான ஊராட்சிகள் முடங்கும் ஆபத்து உள்ளது. இதை அரசு உணர வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X