| திறந்தவெளியில் காலாவதியான உணவு பொருட்கள்: அதிகாரிகள் நடவடிக்கை அவசியம் Dinamalar
திறந்தவெளியில் காலாவதியான உணவு பொருட்கள்: அதிகாரிகள் நடவடிக்கை அவசியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:09

உடுமலை:காலாவதியான உணவுப்பொருட்களை, திறந்தவெளியில், வீசியெறிவதை தடுக்க, உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள வணிகக்கடைகளில், காலாவதியான உணவுப்பொருட்கள், குளிர்பானங்கள் விற்பனை குறித்து, உணவு பாதுகாப்பு துறையினர் உரிய ஆய்வு நடத்துவதில்லை.


குறிப்பாக, கிராமப்புறங்களில், இது குறித்த விழிப்புணர்வு இல்லாமல், காலாவதியான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி உண்ணும் மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது.இந்நிலையில், தரமற்ற உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை குறித்து மக்கள் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.சில நேரங்களில், காலாவதியான பொருட்களை திறந்தவெளியில் வீசிச்சென்று விடுகின்றனர். தற்போது, உடுமலை பி.ஏ. பி., வாய்க்கால் கரையின் பல இடங்களில், காலாவதியான குளிர்பான பாட்டில்கள் ஆயிரக்கணக்கில் வீசி எறியப்படுகின்றன.


இப்பாட்டில்களை, தெரியாமல், அப்பகுதியில், விளையாடும் குழந்தைகள் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. இவ்வாறு, காலாவதியான உணவுப்பொருட்களை திறந்தவெளியில் வீசும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில், அனைத்து பகுதிகளிலும் ஆய்வு நடத்தி, காலாவதியான பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்ய வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X