| தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் Dinamalar
தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:10

உடுமலை:உடுமலை தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு, 30 சதவீதம், மாவட்ட ஒதுக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. மறு சீராய்வு செய்ய வேண்டும்.கிராம உதவியாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை, வெடி மருந்து பயன்படுத்தி கிணறு வெட்டுபவர்கள், கனிம வள கொள்ளையர்களிடமிருந்து கிராம உதவியாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், உள்ளிட்ட, 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டக்கிளை தலைவர் திலீப் தலைமை வகித்தார். செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் காந்திராஜ், துணை செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X