| மீண்டும் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பம்: உள்ளூர் திட்டக்குழுமம் நடவடிக்கை எடுக்குமா? Dinamalar
மீண்டும் 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பம்: உள்ளூர் திட்டக்குழுமம் நடவடிக்கை எடுக்குமா?
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:12

கிணத்துக்கடவு:அனுமதியற்ற மனை பிரிவுகளில் இருந்து, வீட்டு மனையை அங்கீகாரம் செய்ய, உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் மீண்டும், 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் அதிகளவில் உள்ளது.


இதில் இருந்து சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பெற்ற, மற்றும் கிரையம் பெறாத வீட்டு மனைகளை அங்கீகாரம் செய்வதற்கு உள்ளூர் திட்ட குழுமத்தில், 'ஆன்லைன்' மூலம், 2017ம் ஆண்டு முதல் விண்ணப்பிக்கப்பட்டது.இதற்கு, 500 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட்டுள்ள மனுக்களுக்கு மட்டுமே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அதிகளவில் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவாகாததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது உள்ளூர் திட்ட குழுமத்தால் நிறுத்தப்பட்டது. இதனால், அனுமதியற்ற வீட்டு மனைகள் அங்கீகாரம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.


இந்நிலையில், அனுமதியற்ற மனைப்பிரிவில் இருந்து ஒரு வீட்டு மனை, உள்ளூர் திட்ட குழுமத்தில் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்று இருந்தால், மற்ற வீட்டு மனைகள் நேரடியாக ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அங்கீகாரம் பெற்று கொள்ளலாம், என, வதந்தி பரவியுள்ளது.இதனை நம்பிய பொதுமக்கள் அங்கீகாரம் பெற, ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சி அலுவலங்களுக்கு சென்று வருகின்றனர்.


உள்ளூர் திட்ட குழுமத்தில் ஆன்லைன் விண்ணப்பத்தின் அடிப்படையில் மட்டுமே, அங்கீகாரம் வழங்க முடியும் என, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதனால், மீண்டும் உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில், அங்கீகாரம் பெற மக்கள் அணுகுகின்றனர்.தற்போது, வங்கிகளில் அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படுவதால், அனுமதியற்ற வீட்டுமனைகளை கிரையம் செய்தவர்கள் கட்டாயம் அங்கீகாரம் பெறவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தில் மீண்டும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நடவடிக்கை எடுத்தால், விண்ணப்பங்கள் பதிவு செய்ய வசதியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X