சூறாவளி காற்றுடன் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சூறாவளி காற்றுடன் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:13

வால்பாறை:வால்பாறையில், சூறாவளி காற்றுடன் பெய்யும் மழையால், பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.வால்பாறையில் கடந்த, 6ம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்கிறது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்வதால், பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மின் கம்பத்தின் மீது மரம் விழுந்ததால், எஸ்டேட் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பொள்ளாச்சி ரோட்டில் பல இடங்களில், காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால், தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட முடியாமல் குளிரில் சிக்கி தவித்தனர்.தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 2.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 148 கனஅடி தண்ணீர் வரத்தும், 217 கனஅடி தண்ணீர் வெளியேற்றமும் இருந்தது.


இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 13.10 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 160 கனஅடி நீர்வரத்தும், 217 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.நேற்று காலை, 8:00 மணி வரை பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்):வால்பாறை - 19, சோலையாறு - 22, பரம்பிக்குளம் - 24, மேல்நீராறு - 38, கீழ்நீராறு - 31, காடம்பாறை - 1, மேல்ஆழியாறு - 5, பொள்ளாச்சி - 24, நவமலை - 3, துணக்கடவு - 23, பெருவாரிப்பள்ளம் - 23, மணக்கடவு - 14.2, வேட்டைக்காரன்புதுார் - 10.2, நெகமம் - 10, கோமங்கலம்புதுார் - 5, என்ற அளவில் மழை பெய்தது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X