| பொங்காளியூர் ரோடு விரிவாக்கம் Dinamalar
பொங்காளியூர் ரோடு விரிவாக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:13

ஆனைமலை:கோட்டூர் அடுத்த பொங்காளியூர் வழியாக, மயிலாடுதுறை, சேத்துமடை, நரிக்கல்பதி, காளியாபுரம் தெய்வகுளம் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றனர்.பொங்காளியூர், பொன்னாலம்மன்துறை, சேத்துமடை சுற்றுப்பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.


இதனால், விவசாயிகள் விளைபொருட்களை பொங்காளியூர் வழியாக கோட்டூர், ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு, வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.இந்நிலையில், குமரன்கட்டம் பகுதியில் இருந்து பொங்காளியூர் வரை, ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. ரோட்டில் ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் அளவுக்கு இடம் உள்ளது.ரோடு குறுகலாக உள்ளதால், பி.ஏ.பி., கால்வாய் அருகே சமீபத்தில் கார் விபத்து ஏற்பட்டு, கல்லுாரி மாணவன் ஒருவர் உயிரிழந்தார்; ஐந்து பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கதையாக உள்ளது.


இதனால், ரோட்டை விரிவுபடுத்த, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். தற்போது, நெடுஞ்சாலைத்துறையினர் ரோட்டை விரிவுபடுத்தும் பணியை துவங்கி உள்ளனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குமரன் கட்டம் முதல் பொங்காளியூர் வரை, 3.75 மீட்டர் அகலத்துக்கு ரோடு இருந்தது. விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க, 1.08 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.2 கி.மீ., தொலைவுக்கு, 5.5 மீட்டர் அகலத்துக்கு ரோடு விரிவுபடுத்தப்படுகிறது. இன்னும், ஒரு மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X