| பயன்பாட்டிற்கு வராமலே பாழடைந்தது; பாதாள சாக்கடை உந்துநிலைய தொட்டி Dinamalar
பயன்பாட்டிற்கு வராமலே பாழடைந்தது; பாதாள சாக்கடை உந்துநிலைய தொட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:14

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில், 109.62 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், இரண்டு ஆண்டுகளாக நடக்கிறது. ஆள் இறங்கும் குழிகள், கழிவுநீர் குழாய் மற்றும் கழிவுநீர் உந்து நிலையம், சுத்திகரிப்பு நிலையம் கட்டும் பணிகள் நடக்கின்றன.கழிவுநீர் உந்துநிலையம், சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


கட்டுமான பொருட்களுக்கான விலை, வரி உயர்வு போன்ற காரணங்களால் கூடுதலாக, 60 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என அரசுக்கு அதிகாரிகள் கருத்துரு அனுப்பினர்.அதில், முதற்கட்டமாக, 30 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனையடுத்து, மாட்டு சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடக்கிறது. கழிவுநீர் உந்து நிலையங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொள்ளாச்சி நகராட்சி ராஜாராம் 'லே - அவுட்' அருகே கழிவுநீர் உந்துநிலையத்தில், மூன்று தொட்டிகளின் கட்டுமான பணிகள் முடிவடைந்து, அருகே பேனல் அறை கட்டப்படுகிறது.கழிவுநீர் உந்துநிலையத்தில், கட்டப்பட்ட மூன்று தொட்டிகளை சுற்றிலும் புதர்கள் மண்டி காணப்படுகிறது. திட்டம் இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முன், கழிவு நீர் உந்து நிலைய தொட்டி அருகே பராமரிப்பு மேற்கொள்ளாமல் புதர் மண்டி வருகிறது.


புதர்களை அகற்றவும், பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடித்து, கழிவுநீர் உந்து நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ராஜாராம் 'லே - அவுட்'ல் கழிவுநீர் உந்து நிலையம் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. 'பம்ப் செட்' அமைக்க வேண்டும். ஆட்கள் இல்லாததால், தொட்டியை சுற்றிலும் புதர் மண்டியிருக்கலாம். உடனடியாக சுத்தப்படுத்தி பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும், ' என்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X