| சாய்ந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம் Dinamalar
சாய்ந்த மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:15

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டி அருகே, சாயந்த நிலையிலுள்ள மின்கம்பத்தால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில், ஓம்பிரகாஷ் தியேட்டர் பஸ் ஸ்டாப் அமைந்துள்ளது. அனைத்து டவுன் பஸ்களும் நின்று செல்லும் இந்த ஸ்டாப்பில், பல ஆண்டுகளாக பயணிகள் நிழற்கூரை அமைக்கப்படவில்லை. எதிரெதிரே பஸ் ஸ்டாப்கள், அருகே டாஸ்மாக் கடை என மக்கள் நெரிசல் மிக்க பகுதியாக உள்ளது.இதனால், பயணிகள் திறந்தவெளியில் பாதுகாப்பில்லாத நிலையில் நிற்கின்றனர்.


பஸ் ஸ்டாப் அருகே, ஜோதி நகர் ரோடு பிரியும் இடத்தில், இரும்பு மின்கம்பம் சாயாமல் இருக்க, மற்றொரு இரும்பு கம்பம் மூலம் முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், கம்பம் பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. கம்பத்தின் அடிப்பகுதியில், சாக்கடை கால்வாய் இருப்பதால், வாகனங்கள் மோதினால், சரிந்து விழும் அபாயம் அதிகம் உள்ளது.மிக அருகில் பெட்ரோல் பங்க் செயல்படும் நிலையில், கம்பம் சாய்ந்தால் நெரிசல் மிக்க பகுதியில் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மின்கம்பத்தை வேறு இடத்துக்கு மாற்றி, உறுதியாக நட மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X