| வனப்பகுதியில் அத்துமீறல் Dinamalar
வனப்பகுதியில் அத்துமீறல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:18

ஆனைமலை:பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அருகே, வனவிலங்குகளை புகைப்படம் எடுத்தது உள்ளிட்ட வனக்குற்றத்தில் ஈடுபட்ட, ஏழு பேருக்கு வனத்துறையினர், 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து, அட்டகட்டி வரையில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர், ரோந்து சென்றனர்.


அப்போது, சின்னாறுபதி பாலம் அருகே கார் நிற்பது கண்டு சந்தேகமடைந்தனர். அங்கு, சின்னாறுபதி செட்டில்மென்ட் அருகே தடைசெய்யப்பட்ட வனப்பகுதியில் நுழைந்து, ஆழியாறு அணைக்கு நீர் வரும் சிற்றோடையில் குளித்துக்கொண்டிருந்த நபர்களை, பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், கேரள மாநிலம் அடிமாலி பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ், 40, சான்ரோ, 35, பிஜோ, 28, லிஜோ, 37, பாசில், 42, என்பதும், வால்பாறைக்கு சுற்றுலா வந்ததும் தெரியவந்தது.


இதையடுத்து, தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்த குற்றத்துக்காக, தலா, இரண்டாயிரம் என ஐந்து பேருக்கு, பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.அதேபோல், ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவு அருகே, புகைப்படம் எடுத்து வரையாடுகளை தொந்தரவு செய்த, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த முகமது அன்வர்சா, 35, அன்வர்சா, 28, ஆகியோரை பிடித்தனர். அவர்களுக்கு தலா, நான்காயிரம் என மொத்தம், எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மொத்தம், ஏழு பேருக்கு, 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X