சாலை விபத்துகள் குறைந்துள்ளது: எஸ்.பி.,
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:20

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், தடுப்பு நடவடிக்கையால் சாலை விபத்துகள் படிப்படியாக குறைந்துள்ளதாக எஸ்.பி., ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


விழுப்புரத்தில் நடந்த சாலை விபத்துகளை குறைப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் எஸ்.பி., ஜெயக்குமார் பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட 6 தேசிய நெடுஞ்சாலைகளை சேர்த்த 365 கி.மீ., மீட்டர் துாரம் உள்ளது. மாநில நெடுஞ்சாலை 575 கி.மீ., துாரம் உள்ளது. சாலைகள் அதிகம் உள்ளது போல், அதற்கேற்ப விபத்துகளும் அதிகரிக்கிறது.விபத்துகளை படிப்படியாக குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கு அனைத்து துறை அதிகாரிகளின் ஓத்துழைப்பு இருந்தால் மட்டுமே முடியும். கடந்த 2016ம் ஆண்டு 915 பேரும், 2017ம் ஆண்டு 834 பேரும், 2018ம் ஆண்டு 536 பேர் என சாலை விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கை 35 சதவீதம் படிபடியாக குறைந்துள்ளது.கடந்தாண்டை கணக்கிடும் போது 2019ம் ஆண்டு (5 மாதங்கள்) 15 சதவீதம் சாலை விபத்து குறைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒளிரும் மின் விளக்குகள் (பிளாஷ் லைட்) மற்றும் பேரிகார்டுகள் வைத்து சாலை விபத்துகளை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டதையடுத்து, 40 சதவீதம் சாலை விபத்துகள் குறைந்துள்ளது.பழைய சாலைகள் புதுப்பிக்கும் நிலையில் தெர்மோ பிளாஸ்டிக் பெயிண்டிங் (மையக்கோடு) அமைக்கப்படாமல் உள்ளது. நகாய் அதிகாரிகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் சோலார் மின்விளக்குக்கு பதில், எல்.இ.டி., லைட் அமைப்பதற்கு நகாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளில் 103 இடங்கள் விபத்து பகுதியாக காவல் துறை சார்பில் கண்டறியப்பட்டுள்ளது.அவ்விடங்களில் மொத்தம் 57 லட்சம் ரூபாய் மதிப்பில் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ஒளிரும் மின்விளக்குகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சாலை விபத்துகளை தடுப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X