அரசு அலுவலகங்களில் புரோக்கர் நுழைய தடை! வருவாய் கோட்டாட்சியர் எச்சரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:21

பொள்ளாச்சி;''அரசு அலுவலகங்களில் புரோக்கர்கள் நுழைவதை தடை செய்ய வேண்டும்,'' என, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமை வகித்தார்.


விவசாயிகள் பேசியதாவது:கொப்பரை கொள்முதல் செய்ய அரசு முன்வர வேண்டும். வெளிமார்க்கெட்டில், விலை குறையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே விவசாயிகள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யும் போது, மரங்கள் வெட்டப்பட்டு, முழுமையாக அகற்றாமல் வேர் பகுதியை அப்படியே விட்டு செல்கின்றனர். முழுமையாக அகற்றுவதில்லை.


திப்பம்பட்டியில் உள்ள, இளநீர் வணிக வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. இதனை மாற்று பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.ஆங்காங்கே குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பி.ஏ.பி.,யில் இருந்து குளம், குட்டைகளுக்கு தண்ணீர் வழங்க வேண்டும். ஆழியாறு வேளாண்துறை தென்னை நாற்று பண்ணையில், நாற்று வளர்ப்பதில்லை. தனியார் நாற்று பண்ணையில், வாங்கி கொள்ளுமாறு அதிகாரிகளே கூறுகின்றனர்.ஆழியாறு பீடர் கால்வாய், ஆறு கி.மீ., துாரம் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள கால்வாயையும் புதுப்பிக்க வேண்டும்.


கிராமப்புறங்களில், குடிநீர் வினியோகத்தில் உள்ள முறைகேடுகளை தவிர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். தெற்கு ஒன்றிய அலுவலகத்தில், அதிகாரிகள் யார், புரோக்கர்கள் யார் என்று தெரியாத நிலை உள்ளது. அதிகளவு புரோக்கர்கள் நடமாட்டம் உள்ளது.இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.வருவாய் கோட்டாட்சியர் பேசியதாவது:விவசாயிகளின் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மனுக்கள் அல்லது விவசாயிகள் கூட்டத்தில் தெரிவிக்கும் குறைகளை அதிகாரிகள் குறிப்பெடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.அடுத்த கூட்டத்தில், விவசாயிகள் பிரச்னைகளுக்கு பதில் தெரிவிக்க வேண்டும். விவசாயிகள் கூறும் குறைகளை கூர்ந்து கவனித்து, முனைப்புடன் செயல்பட்டு தீர்வு காண வேண்டும்.அரசு அலுவலகங்களில், 'புரோக்கர்கள்' இருக்க கூடாது; அவர்கள் உள்ளே வருவதை தடை செய்ய வேண்டும். இதனை, அந்த அலுவலக நிர்வாக பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் விளக்கமளித்தார்.நெல் விவசாயிகள் வலியுறுத்தல்!ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்னும் தண்ணீர் திறக்கவில்லை. ஒவ்வொரு முறையும் போராடி தண்ணீர் பெற வேண்டிய நிலை உள்ளது.


ஏப்., 15ல் தண்ணீர் திறந்திருந்தால், செப்.,ல் மழைக்கு முன், நெல் அறுவடை முடிந்து இருக்கும். தண்ணீர் தாமதமாக திறப்பதால், மழை காலத்தில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகிறது. எனவே, உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும்.ஆனைமலை குளப்பத்துக்குளம், 126 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால், குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளால், 80 ஏக்கராக சுருங்கியுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றவும், வண்டல் மண் எடுக்கவும் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். நெல் அறுவடைக்கு வேளாண் பொறியியல் துறையில் இருந்து இயந்திரம் வழங்க வேண்டும். நெல் கொள்முதல் செய்ததில், நிலுவை தொகையை வழங்க வேண்டும், என, நெல் விவசாயிகள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X