| பிரதான சாலைகள் விரிவுபடுத்தியும் பலனில்லை: கட்டமைப்பு மேம்படுத்துவதே தீர்வு Dinamalar
பிரதான சாலைகள் விரிவுபடுத்தியும் பலனில்லை: கட்டமைப்பு மேம்படுத்துவதே தீர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
05:23

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, முக்கிய ரோடுகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. ஆனால், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இடங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகின்றன.பொள்ளாச்சியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், நெரிசல் மிகுந்த நகரமாக மாறி வருகிறது. நெரிசலை சமாளிக்க, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


அவற்றில் முக்கியமானது, நெடுஞ்சாலைகள் விரிவாக்கம்.பொள்ளாச்சியை கடந்து செல்லும் வெளியூர் வாகனங்களின் போக்குவரத்து, மற்றும் உள்ளூர் போக்குவரத்து இரண்டுமே நகர எல்லைக்குள் உள்ள நெடுஞ்சாலைகளில் சங்கமிக்கின்றன. இதனால், நெரிசல் இரு மடங்கு அதிகரிக்கிறது.இதை சமாளிக்க, நகர எல்லைக்குள் உள்ள மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. முதலில் பாலக்காடு ரோடு, உடுமலை ரோடு, அதையடுத்து வால்பாறை ரோடு, திருச்சூர் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டன.தற்போது, நகராட்சி ரோடுகள் மற்றும் நெடுஞ்சாலைகள் சந்திக்கும் பகுதிகள், பஸ் ஸ்டாப்கள் உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படுகின்றன.


அதன் ஒரு பகுதியாக, கோவை ரோட்டில் மகாலிங்கம் நுழைவாயில் பகுதியில் ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணி நிறைவடைவதற்கு முன்பே, ஆட்டோக்கள், நடைபாதை கடைகள், பிளக்ஸ் பேனர்கள் என ஆக்கிரமித்துள்ளன.இதே போன்று, மற்ற ரோடுகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து, ரோடு விரிவாக்கத்தின் நோக்கத்தையே அர்த்தமிழக்க செய்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றுவதில் அக்கறை காட்ட வேண்டும். அப்போது தான், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X